தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி

தூத்துக்குடியில் இருந்து காயல்பட்டினம் நோக்கி தனது பைக்கில் வாலிபர் ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக மோதியது.
பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் சென்ற பைக் மீது லாரி மோதிய விபத்தில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வாலிபர் பைக்கில் பயணம்

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் ஆழியார் தெருவைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகன் ஷேக்அப்துல்காதர் (வயது 26). இவர் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து காயல்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி

அப்போது அவருக்குப் பின்னால் வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக அவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஷேக்அப்துல்காதரின் தலையின் பின் பகுதியில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய முக்காணி, யாதவர் தெரு நடுத்தெருவைச் சேர்ந்த கோட்டைமுத்து மகன் பாலசுப்ரமணியன்(51) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com