தூத்துக்குடி அதிமுக பகுதி செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்

தூத்துக்குடி அதிமுக பகுதி செயலாளர் எஸ்.பி.எஸ். ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அதிமுக பகுதி செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்
Published on

சென்னை,

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால்,

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பி.எஸ். ராஜா, ( தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.17 கோடி மோசடி வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் எஸ்.பி.எஸ். ராஜாவை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மலேசியா தப்பி செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர். அதனைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com