தூத்துக்குடி: விவசாய நிலத்தில் சிக்கிய எறும்புத்தின்னி - பொதுமக்கள் வியப்பு

ஆத்தூரில் விவசாய நிலத்தில் சிக்கிய எறும்புத்தின்னி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி: விவசாய நிலத்தில் சிக்கிய எறும்புத்தின்னி - பொதுமக்கள் வியப்பு
Published on

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து பகுதியான கொழுவைநல்லூர் தேவர் தெரு பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. இதனை கால்நடைகள் சேதப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக நைலான் வலைகள் மூலம் வயலின் வெளிப்புறம் சுற்றி அடைக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் இந்த வலையில் விசித்திரமான பிராணி ஒன்று சிக்கி இருந்தது. அது என்னவென்று தெரியாதவர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களை கேட்டு தெரிந்து கொண்டனர். இறுதியாக அதை எறும்பு தின்னி என்றும் அது சாதாரண வகையை விடசற்று பெரிதாக இருந்ததால் அதை வேறு ஏதோ என்று நினைத்துள்ளனர்.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் வலையிலிருந்து எறும்பு திண்ணி தப்பிவிட்டது. பின்னர், மீண்டும் அப்பகுதியில் உள்ளவர்கள் அதைத் தேடி கண்டுபிடித்து வனத்துறையில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com