தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். #Thoothukudi
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவு
Published on

சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்தநிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே, துத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி போலீசார் வழக்கை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com