தூத்துக்குடி: உப்பாற்று ஓடையில் முதியவர் சடலம் மீட்பு- போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பைபாஸ் பாலத்தின் கீழே உள்ள உப்பாற்று ஓடையில் முதியவர் ஒருவரின் சடலம் சகதியில் சிக்கிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி: உப்பாற்று ஓடையில் முதியவர் சடலம் மீட்பு- போலீசார் விசாரணை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பைபாஸ் பாலத்தின் கீழே உள்ள உப்பாற்று ஓடையில், நேற்று முதியவர் ஒருவரின் சடலம் சகதியில் சிக்கிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்கோட்டை போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த நபருக்கு சுமார் 75 வயது இருக்கும் எனத் தெரிகிறது. அவரது உடலில் காயங்கள் ஏதுமில்லை. தோற்றத்தைப் பார்க்கும்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? ஓடைக்குள் எப்படி சென்றார்? என்பது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com