தூத்துக்குடி: பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் பலி

தூத்துக்குடி சோட்டையன்தோப்பு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கொத்தனார் வேலை செய்து வந்தார்.
பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் பலி.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மதுரை பைபாஸ் ரோட்டில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கொத்தனார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கொத்தனார்

தூத்துக்குடி சோட்டையன்தோப்பு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் மகன் மணிகண்டன் (வயது 31). இவர் தூத்துக்குடியில் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு கலைவேணி(26) என்ற மனைவியும், 6 வயதில் மகளும் உள்ளனர். இவரது மனைவி தற்போது பி.சுப்பிரமணியபுரம் ஊரில் உள்ள தனது பெற்றோார் வீட்டில் தங்கியுள்ளார்.

பைக்கில் பயணம்

இந்த நிலையில் நேற்று வேலை முடித்த மணிகண்டன், தனது மனைவியைத் தூத்துக்குடியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகத் தனது பைக்கில் தூத்துக்குடி- மதுரை பைபாஸ் சாலையில் உள்ள குறுக்கு சாலை வழியாக வாலசமுத்திரம் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் பலி

வாலசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வழக்குப்பதிவு

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com