தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டது. #SterliteProtest
தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் கலகக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியதனை அடுத்து இன்று 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்தவர்களை அமைச்சர்கள் மற்றும் டி.ஜி.பி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பிறகு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி, ஆட்சியர் சந்தீப் நந்தூரி , எஸ்.பி. முரளி ரம்பாவுடன் டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com