

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தை சேர்ந்த விவசாயிகளான செல்வம், சண்முகம் ஆகியோர் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இவர்களிடம் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இருந்து வருவதாக கூறிய 2 பேர், 60 ஆடுகளை ரூ.5 லட்சத்து 24 ஆயிரத்துக்கு வாங்க முன்பணம் ரூ.1,000 வழங்கினர்.
இதையடுத்து செல்வம் 60 ஆடுகளுடன் சேத்தியாத்தோப்பு வந்தார். அங்கு ஆடுகளை வாகனத்தில் ஏற்றிய பின்னர் பணம் கேட்டபோது, முகத்தில் ஸ்பிரே அடித்து அவரை மயக்கமடையச் செய்த அந்த நபர்கள் ஆடுகளுடன் தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.