தூத்துக்குடி: 7 நாட்களுக்கு பின் 179 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது.
தூத்துக்குடி: 7 நாட்களுக்கு பின் 179 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
Published on

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகளில் சுழற்சி முறையில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மீன்பாடு அதிகமாக இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் செப்டம்பர் 26 மற்றும் 27ம் தேதி ஆகிய 2 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

அதன் பின்னர் தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுழற்சி முறையில் 179 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com