தூத்துக்குடி சிறுமி கொலை வழக்கு: துரிதமாக செயல்பட்ட 25 காவல்துறை அதிகாரிகளுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு

குளத்தூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கில் குற்றவாளியை துரிதமாக கண்டறிந்து கைது செய்த 11 இன்ஸ்பெக்டர்கள், 14 சப்-இன்ஸ்பெக்டர்களை நேரில் அழைத்து நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் பாராட்டினார்.
தூத்துக்குடி சிறுமி கொலை வழக்கு: துரிதமாக செயல்பட்ட 25 காவல்துறை அதிகாரிகளுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு
Published on

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கில் திறம்பட பணியாற்றி கொலை குற்றவாளியை கண்டறிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறப்பாக பணிபுரிந்த 25 காவல்துறை அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன் நேற்று, திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் வைத்து நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

குளத்தூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். நுணுக்கமான புலனாய்வு மூலம் கொலையாளியைக் கண்டறிந்து, அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்திய காவல்துறையினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முறையே சக்திவேல் (விளாத்திகுளம்), உமா மகேஸ்வரி (எப்போதும்வென்றான்), அசோக்பாபு (சங்கரலிங்கபுரம்), ராஜேஷ் (புதூர்), காசிபாண்டியன் (தூத்துக்குடி வடபாகம்), ஹரிஹரன் (முறப்பநாடு), நவநீதகிருஷ்ணன் (கோவில்பட்டி மேற்கு), சைரஸ் (தருவைக்குளம்), சாந்தி (சைபர் குற்றப்பிரிவு), திலீபன் (ஆறுமுகநேரி), பவுல் ஏசுதாசன் (மாசார்பட்டி)

மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முறையே ராஜபிரபு, மணிமாறன் (காவல் கட்டுப்பாட்டு அறை), சண்முகம் (கோவில்பட்டி மேற்கு), மாதவராஜா (விளாத்திகுளம்), சுந்தர் (நாலாட்டின்புதூர்), பெபின் செல்வ பிரிட்டோ (சிப்காட்), செந்தில்குமார் (ஸ்ரீவைகுண்டம்), சுப்புராஜ் (முறப்பநாடு), முத்துராஜா (ஆறுமுகநேரி), பாலன் (ஆழ்வார்திருநகரி), காவுராஜன் (தூத்துக்குடி தென்பாகம்), சுதாகரன், அச்சுதன் (சைபர் குற்றப்பிரிவு) மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் (மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை) ஆகிய 25 காவல்துறையினருக்கு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன் நற்பணிச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com