தூத்துக்குடி: சிறுவனை கத்தியால் குத்திய தலைமை காவலர் கைது

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தலைமை காவலர், தான் வைத்திருந்த கத்தியை கொண்டு சிறுவனை குத்தியுள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சிவனேசன். இவர் சம்பவத்தன்று தனது குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றார். அப்போது ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தின் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.
இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தலைமை காவலர், தான் வைத்திருந்த பாக்கெட் கத்தியை கொண்டு சிறுவனை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவன், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், சிறுவனை கத்தியால் குத்திய தலைமை காவலர் சிவனேசன் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






