தூத்துக்குடி: கடனை திரும்பக் கேட்ட வங்கி மேலாளர் மீது கொலைவெறி தாக்குதல்

தி.மு.க. பகுதிச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட போல்பேட்டை தி.மு.க. பகுதிச் செயலாளராக இருப்பவர் ஜெயக்குமார்.
இந்த சூழலில் தூத்துக்குடி துறைமுகம் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அவர் கடன் பெற்றுள்ளதாகவும் அதனை முறையாக செலுத்தாததால் வங்கி மேலாளர் கடனைத் திருப்பி செலுத்தக் கோரியதால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், வங்கி மேலாளரை தாக்கியதோடு கொலைமிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
இதனை தொடர்ந்து பலத்த காயமடைந்த வங்கி மேலாளர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட மத்தியப் பாகம் காவல்துறையினர் BNS act: 296, 115, 118, 351ன் கீழ் வழக்குப் பதிவு (FIR: 167/2025) செய்து தி.மு.க. பகுதிச் செயலாளர் ஜெயக்குமார் உள்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை பகுதிச் செயலாளர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






