

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 56) என்பவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் விஜூ மகாஜன் உத்தரவின்பேரில் மேற்சொன்ன நபரை இன்று (12.5.2026) கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.