தூத்துக்குடி: பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்த போலீசார் நடை ரோந்து

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து எம்.எல்‌.ஏ. அலுவலகம் சந்திப்பு வரை போலீசார் நடை ரோந்து மேற்கொண்டனர்.
நடை ரோந்து
Published on

தூத்துக்குடி,

தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா தலைமையில் கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன், கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியன் உட்பட சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் நேற்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து எம்.எல்‌.ஏ. அலுவலகம் சந்திப்பு வரை நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டனர்.

விழிப்புணர்வு:

குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நடை ரோந்து நடைபெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com