தூத்துக்குடி: போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி


தூத்துக்குடி: போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி
x
தினத்தந்தி 16 Sept 2025 7:56 AM IST (Updated: 16 Sept 2025 8:00 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டியை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்து, துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நேற்று (15.9.2025) மற்றும் இன்று (16.9.2025) ஆகிய 2 நாட்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி நகரம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9வது பட்டாலியன், 11வது பட்டாலியன், மற்றும் 12வது பட்டாலியனைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று துவக்கி வைத்து பின்னர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மேற்சொன்ன மாவட்டம்/நகரம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த டி.எஸ்.பி.க்கள், ஏ.டி.எஸ்.பி. என மொத்தம் 22 காவல்துறை உயர் அதிகாரிகள் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story