

சென்னை,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கான,கால அவகாசம் வருகின்ற 22 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில்,அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு ,அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.