தூத்துக்குடி: குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி: குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சப்-இன்ஸ்பெக்டர்கள்/ சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் (Child Welfare Officer) செயல்பட்டு வருகின்றனர். அந்த குழந்தைகள் நல காவல் அலுவர்களுக்கான அறிவுரைக் கூட்டம் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நேற்று, மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்களை கையாள்வது குறித்தும், அவர்களை கையகப்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்தும், தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும் மாவட்ட எஸ்.பி. எடுத்துரைத்து அறிவுரைகள் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. தீபு, தூத்துக்குடி சிறப்பு சிறார் காவல் அலகின் பொறுப்பு அதிகாரியும் மாவட்ட குற்றப் பிரிவு-I டி.எஸ்.பி.யுமான ராஜூ உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com