தூத்துக்குடி: பணியின்போது இறந்த போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு அரசு பணியாணை- எஸ்.பி. வழங்கல்

தூத்துக்குடியில் பணியின்போது மரணமடைந்த பெண் காவலரின் கணவருக்கும், சப்-இன்ஸ்பெக்டரின் மனைவிக்கும் வரவேற்பாளர் பதவிக்கு தமிழக அரசு பணி நியமனம் செய்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த பெண் காவலர் சந்திரா கணவர் ரவிசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மனைவி சுப்புலட்சுமி ஆகிய 2 பேருக்கும் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி காவல்துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த மேற்சொன்ன பெண் காவலரின் கணவருக்கும், சப்-இன்ஸ்பெக்டரின் மனைவிக்கும் வரவேற்பாளர் (Recepionist) பதவிக்கு தமிழக அரசு பணி நியமனம் செய்துள்ளது. அதற்கான பணி நியமன ஆணையை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று (24.5.2025) ரவிசெல்வம் மற்றும் சுப்புலட்சுமி ஆகிய இருவருக்கும் வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.
Related Tags :
Next Story






