தூத்துக்குடி: பனை மரத்திலிருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு


தூத்துக்குடி: பனை மரத்திலிருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு
x

கோவில்பட்டி அருகே, பசுவந்தனையை அடுத்துள்ள கோவிந்தம்பட்டியைச் சேர்ந்த மாணவன் அருண்சந்தோஷ், கோவில்பட்டி முத்துநகரில் உள்ள அருண்பிரகாஷ் என்பவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளான்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே, பசுவந்தனையை அடுத்துள்ள கோவிந்தம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த எட்டுராஜ் மகன் அருண்சந்தோஷ் (வயது 17) பிளஸ் 1 வகுப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாததால், கோவில்பட்டி முத்துநகரில் உள்ள அருண்பிரகாஷ் என்பவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளான்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அருண்பிரகாஷ் கருங்காலிப்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு அருண்சந்தோஷ், அவரது நண்பா் ஆகாஷ் ஆகியோருடன் சென்றுள்ளான். அங்கு அருண்சந்தோஷ் பனைமரத்தில் ஏறி நுங்கு வெட்டியபோது தவறி கீழே விழுந்துள்ளான். இதில் காயமடைந்த அந்த மாணவனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்த பின்னர் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

1 More update

Next Story