தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு

குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கான தண்டனை விவரத்தை சற்று நேரத்தில் அறிவிப்பதாக கோர்ட் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு:  தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு
Published on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி, கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி இரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. மறுநாள் காலையில் அந்த மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். அது போல் 5 பேரின் டிஎன்ஏக்களை சோதனை செய்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட போக்சோ கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என கோர்ட் அறிவித்தது. குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு எதிரான தண்டனை விவரங்கள் சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com