தூத்துக்குடி: வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவு அஞ்சலி

சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் நடந்த நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியில், பணியின் போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி: வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவு அஞ்சலி
Published on

தூத்துக்குடி,

ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் தேதி, தீ விபத்து மற்றும் மீட்புப் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நிலைய போக்குவரத்து அலுவலர் புன்னவனகட்டி முன்னிலை வகித்தார். பணியின் போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த வீரவணக்க நிகழ்வில் நிலையப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com