தூத்துக்குடி: ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை- போலீஸ் விசாரணை


தூத்துக்குடி: ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை- போலீஸ் விசாரணை
x

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆறுமுகநேரி- காயல்பட்டணம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

சென்னையில் இருந்து 25ம் தேதி இரவு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் ஆறுமுகநேரி- காயல்பட்டணம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் ரெயில் மோதியதில் அவரது உடல் இரண்டு துண்டானது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை இருப்புப் பாதை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த பெண் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர், தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story