தூத்துக்குடி: பக்கிள் ஓடையில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி: பக்கிள் ஓடையில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு, தனியார் மருத்துவமனை அருகே 3வது ரயில்வே கேட் பாலம் அருகே பக்கிள் ஓடையில் இன்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் ரோட்டில் நடந்து சென்ற போது வெயிலின் தாக்கத்தால் மயங்கி மின்கம்பத்தில் சாய்ந்து நின்றபேது திடீரென ஓடைக்குள் தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மத்திய பாகம் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com