தூத்துக்குடி: ஆன்லைன் டிரேடிங் மூலம் பெண்ணிடம் ரூ.5.90 லட்சம் மோசடி- வாலிபர் கைது

தூத்துக்குடியில் மர்ம நபர் ஆன்லைன் டிரேடிங் மூலமும் அதிக லாபம் பெறலாம் என பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.5.90 லட்சம் மோசடி செய்துள்ளார்.
தூத்துக்குடி: ஆன்லைன் டிரேடிங் மூலம் பெண்ணிடம் ரூ.5.90 லட்சம் மோசடி- வாலிபர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு என செய்தி வந்துள்ளது. அதனை நம்பி மேற்சென்ன பெண் அந்த மர்ம நபர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரேட்டிங்ஸ் மற்றும் ரிவியூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு லிங்க அனுப்பியுள்ளனர். அந்த லிங்க் மூலம் மேற்படி பெண் ரேட்டிங்ஸ் கொடுத்து முதலில் ரூ.3,670 பணத்தை பெற்றுள்ளார். பின்னர் மேற்சொன்ன மர்ம நபர் ஆன்லைன் டிரேடிங் மூலமும் அதிக லாபம் பெறலாம் என அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி மற்றொரு லிங்க் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் வந்த இணையள பக்கத்தில் மொத்தம் ரூ.5 லட்சத்து 90 ஆயிரத்து 830 பணத்தை முதலீடு செய்துள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் லாபம் வரவில்லை என்று அந்த மர்ம நபர்களை தொடர்பு கொண்டபோது, அவர்கள் கூடுதலாக பணத்தை கட்டினால்தான் முதலீடு மற்றும் அதற்கான லாப பணத்தை எடுக்க முடியும் என்று வற்புறுத்தியுள்ளனர். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அந்த பெண், இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. சகாய ஜோஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கன்னியாகுமரி திருப்பரப்பு பள்ளிமுக்கு பகுதியைச் சேர்ந்த மணி மகன் மகேஷ் (வயது 37) மேற்சொன்ன பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்சொன்ன சைபர் குற்றப்பிரிவு போலீசார் மகேஷை நேற்று (24.5.2025) கைது செய்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com