தூத்துக்குடி: நீரில் மூழ்கி வாலிபர் பலி


தூத்துக்குடி: நீரில் மூழ்கி வாலிபர் பலி
x

திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு வாலிபர் குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே அம்மன்புரத்தில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு சென்றுள்ளார்.

தூத்துக்குடி

திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஆதிலெட்சுமணன் மகன் மணிகண்டன் (வயது 28). கொத்தனார் ஆகிய இவர் டைல்ஸ் ஒர்க் செய்து வந்தார். இவரது மனைவி கார்த்திகா(எ) கிருஷ்ணம்மாள். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் தசரா திருவிழாவிற்கு மாலை அணிந்து குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே அம்மன்புரத்தில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது மணிகண்டன் அங்குள்ள சுனை நீரில் இறங்கியுள்ளார். அவருக்கு ஏற்கெனவே வலிப்பு நோய் இருந்ததால், தண்ணீரில் அதிக நேரம் குளிக்க வேண்டாம் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

ஆனால், அதையும் மீறி அவர் சுனை நீரில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story