தூத்துக்குடி–தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு

சிறப்பு ரெயில் சேவையை பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் வரை நீட்டித்துள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி–தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு
Published on

சென்னை,

தூத்துக்குடி–தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில்களின் சேவையை, பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் வரை நீட்டித்துள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, தூத்துக்குடியில் இருந்து தாம்பரம் நோக்கி இயக்கப்படும் (வண்டி எண்: 06018) சிறப்பு ரெயில், மே 4, 11, 18, 25 மற்றும் ஜூன் 1, 8 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

இதேபோல், தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி இயக்கப்படும் (வண்டி எண்: 06017) சிறப்பு ரெயில், மே 5, 12, 19, 26 மற்றும் ஜூன் 2, 9 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4:30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

இந்த சிறப்பு ரெயில், தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com