தொப்பம்பட்டி அரசு பள்ளி முதலிடம்

கலைத்திருவிழாவில் தொப்பம்பட்டி அரசு பள்ளி முதலிடம் பிடித்தது.
தொப்பம்பட்டி அரசு பள்ளி முதலிடம்
Published on

பொள்ளாச்சி வடக்கு வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் முதல் இடம் பிடித்த மாணவர்கள் மட்டும் வடக்கு வட்டார அளவிலான போட்டியில் கலந்துகொண்டனர். தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் குழுவினர் கும்மி நடனத்தில் வட்டார அளவில் முதலிடம் பிடித்தனர். குழுவில் மாணவிகள் லத்திகா, வரினீஸ்வரி, ஹேமலதா, ஆஷிகா ஸ்ரீ, கீர்த்தனா, அங்காளீஸ்வரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதேபோன்று திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாணவி தமிழரசி 2-ம் இடமும், காய்கறி செதுக்கு சிற்பம் போட்டியில் மாணவி பிரியதர்ஷினி 2-ம் இடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகைளை பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் பாராட்டினர். வட்டார அளவில வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com