கோவை மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்: விஜயகாந்த்

கோவை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றம் செய்த அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோவை மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்: விஜயகாந்த்
Published on

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவையில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்பாவி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும். மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க மாணவி மரணத்திற்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். வேலியே பயிரை மேய்ந்தது போல பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வி.கே.சசிகலாவும் மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com