

சென்னை,
ஜாதி, மத ஒழிப்பு நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தனது சமூக வலைதள பக்கத்தில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். தனது இரண்டு மகள்களையும் பள்ளியில் சேர்க்கும்பேது விண்ணப்பத்தில் ஜாதி, மதத்தை குறிப்பிட மறுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதுபேன்ற செயல்கள் தான் அடுத்த தலைமுறைக்கு உதவும் என்றும், ஒவ்வெருவரும் இந்தச் செயல்களில் இறங்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் இதனைச் செயல்படுத்த தெடங்கி இருப்பதாகவும், இதுபேன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் பாராட்டுக்குரியவர்கள் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.
மேலும் நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா? என சமூக வலைதள பக்கத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த கமலஹாசன், நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், பூணூல் அதனாலேயே அதை தவிர்த்தேன்.
என பதிவிட்டுள்ளார்.