இடைத்தேர்தலில் தோற்றுப்போனவர்கள் ஏதாவது ஒரு விளக்கத்தை சொல்லத்தானே வேண்டும் - வைகோ

தமிழகத்தில் ‘கமிஷன், கலெக்ஷன்' என்ற பேச்சுகளுக்கு இடமில்லை என வைகோ கூறினார்.
வைகோ
Published on: 

சென்னை,

சென்னை எழும்பூரில், தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இலங்கையின் உள்நாட்டுப் போரிலும் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தும் வெற்றி பெற முடியவில்லை என்று விமர்சித்தார். மேலும், விஜய் மீது முன்வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களையும் மக்கள் புறந்தள்ளியுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் ‘கமிஷன், கலெக்ஷன்' என்ற பேச்சுகளுக்கு இடமில்லை என்பதை இந்த வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாகவும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் பெற்ற வெற்றி ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும் குறிப்பிட்டார்.

"தோற்றுப்போனவர்கள் ஏதாவது ஒரு விளக்கத்தை சொல்லத்தானே வேண்டும்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு வைகோ பதில் அளித்தார்.

அதனை தொடர்ந்து, “எஸ்.ஐ.ஆர் இல்லாமல் இருந்து, எல்லா இடங்களுக்கும் முதல்-அமைச்சர் பிரசாரம் செய்திருந்தால் 200 தொகுதிகளில் வெற்றிபெற்றிருப்பார்” என திருச்சி மதிமுக எம்.பி. துரை வைகோ கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com