தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்; ராகுல் காந்தி காட்டம்

தொகுதி மறுவரையறை தமிழகத்தை பாதிக்கும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 ராகுல் காந்தி
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் நிறைவு நாளான இன்று ராகுல் காந்தி பங்கேற்று, மாவட்டத் தலைவர்களிடம் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார்.

அதனை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும். தொகுதி மறுவரையறையை ஒவ்வொரு மாநில, தேசிய கட்சியும், தோற்கடிக்க வேண்டும்.

தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் எதிர்காலம் குறித்த பிரச்சினை இது. தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள். தொகுதி மறுவரையறை தமிழ்நாடு மக்களிடம் இருந்து அதிகாரத்தை பறித்துவிடும் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com