முதல்-அமைச்சரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள் - அப்பாவு பேட்டி

பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார் என அப்பாவு கூறியுள்ளார்.
முதல்-அமைச்சரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள் - அப்பாவு பேட்டி
Published on

நெல்லை,

நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தவெக தலைவர் விஜய் குறித்து கூறியதாவது:

 கரூர் விவகாரத்தில் முதல்-அமைச்சரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள். பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார். கரூர் நெரிசலில் 41 பேர் இறந்தபோது துண்டை காணோம், துணியை காணோம் என ஓடினர். எந்த தலைவரும் தன் தொண்டன் இறக்க வேண்டும் என எண்ண மாட்டார் என பேசியவர் முதல்-அமைச்சர். முதல்-அமைச்சரின் பெருந்தன்மையை சாதாரண மக்கள் பாராட்டி கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com