சர்வதேச போட்டியில் பங்கேற்க விரும்புவோர் மாவட்ட திறனாய்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

சர்வதேச போட்டியில் பங்கேற்க விரும்புவோர் மாவட்ட திறனாய்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டியில் பங்கேற்க விரும்புவோர் மாவட்ட திறனாய்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

சர்வதேச திறனாய்வு போட்டிகளில் பங்கேற்க தகுதியானவர்கள் மாவட்ட போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2024-ம் ஆண்டுக்கான சர்வதேச திறனாய்வு போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான்நகரில் செப்டம்பர் 2024 மாதம் நடக்கிறது. இதனை முன்னிட்டு முதல் கட்டமாக கல்வி நிறுவனங்களில் பயில்வோர், தனிநபர் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர் ஆகிய 3 பிரிவுகளாக மாவட்ட அளவில் திறனாய்வு போட்டிகள் நடைபெற உள்ளது. 1.1.1999 அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆண், பெண் இரு பாலரும் இந்த போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர்.

தகுதிகள்

55 தொழிற் பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற விருக்கும் இந்த போட்டிகளில் தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், ஐ.டி.ஐ பயிற்சியாளர்கள், பள்ளி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில் நுட்ப கல்லூரி, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த நர்சிங் கல்லூரி போன்ற கல்லூரிகளில் பயில்வோர் மற்றும் பயின்று முடித்தவர்கள் மற்றும் தனிநபர் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம்.

இணையதளம் மூலம்...

போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் www.naanmudhalvan.tn.gov.in/tnskillsஎன்ற இணைதளம் மூலம் வருகிற 30-ந் தேதி வரை தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com