விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 986 இருந்தது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 34 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,020 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் விழுப்புரம் மாவட்ட மக்கள் ஒவ்வொருவரும் முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com