வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு மிரட்டல்

வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு மிரட்டல்
Published on

வேலூர் அலமேலுமங்காபுரம் அழகிரிநகர் 5-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35).

இவரது மனைவி கலைவாணி (29). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்தநிலையில் வெங்கடேசன், அவரது தாயார் மல்லிகேஸ்வரி மற்றும் குடும்பத்தினர் கலைவாணியிடம் ரூ.5 லட்சம் பணம் பெற்று வருமாறு வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவரை தாக்கி மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வாசுகி விசாரணை மேற்கொண்டார். பின்னர் வெங்கடேசன், மல்லிகேஸ்வரி மற்றும் அவர்களது உறவினர் 2 பேர் என 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com