

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - தமிழ்நாடு மூன்று நாள் "மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப்பயிற்சி"
தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான 'மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப்பயிற்சி' வரும் 23.06.2026 முதல் 25.06.2026 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சி, பங்கேற்பாளர்களுக்கு மொபைல் போன் ஹார்ட்வேர் மற்றும் Chip Level Service துறையில் தொழில்துறைத் தரநிலைக்கு ஏற்ப தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் நடைமுறை திறன்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடிவில், பயிலாளர்கள் Self-Employment / Service Centre / Technician Role-க்கு தயாராக இருப்பார்கள்.
மொபைல் போன்களின் அடிப்படை அறிமுகம்,
தொலைபேசிகளின் வகைகள், ஆண்ட்ராய்டு மற்றும் சிப்செட் உற்பத்தியாளர்கள் பற்றிய விளக்கம்.
சார்ஜர்கள் மற்றும் பேட்டரிகளின் வகைகள், டிஸ்ப்ளே வகைகள் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள்.
Ear Speaker, Loud Speaker, Microphone போன்ற கூறுகள் மற்றும் சார்ஜிங் இணைப்பகங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் நடைமுறைகள்.
FFC ஸ்ட்ரிப்ஸ், கேபிள்கள், சென்சார்கள் மற்றும் சார்ஜிங் போர்டுகள் தொடர்பான பழுதுபார்த்தல்.
Chip Level சர்வீசிங் பற்றிய அடிப்படை மற்றும் சுருக்கமான விளக்கம்.
SMT கூறுகள், மின்தடை (Resistor), மின் தேக்கி (Capacitor), டையோடு (Diode), IC ஆகியவற்றின் செயல்முறை விளக்கம்.
கூறுகளை அகற்றுதல், Soldering நுட்பங்கள் மற்றும் Multimeter மூலம் கூறுகளை கண்டறியும் பயிற்சி.
மாணவர்களின் தனிப்பட்ட செயல்திறன் மேம்பாட்டுக்கான நடைமுறை பயிற்சி.
மொபைல் மதர்போர்டில் உள்ள மின்னழுத்தப் பிரிவுகள் - CPU, EMMC, Network, Battery, CC Board, Display, Battery Section.
மின்னழுத்தம் (Voltage), மினோட்டம் (Current), Amps & Watts பற்றிய தெளிவான விளக்கம்.
மதர்போர்டில் Voltage-களை கண்டறியும் முறைகள் மற்றும் Dead Condition மொபைல்களை சரி செய்யும் நுட்பங்கள்.
BQ, MediaTek, Qualcomm சார்ஜிங் Tracing மற்றும் Fixing நடைமுறைகள்.
LCD மற்றும் OLED Display பிரிவுகள், Backlight மற்றும் GFX Section பழுதுபார்த்தல்.
VREG Line, LDO Lines Tracing, Short Killer மூலம் மொபைல் சரி செய்யும் முறை
Primary & Secondary Power Section 5, 6 Amps & Port Repair.
DC PSU Reading கொண்டு 6 Fault Diagnosis.
Software Unlock கருவிகள், Network Section - PA மற்றும் WTR நேரடி கண்காணிப்பு மற்றும் சரிசெய்தல்.
FRP Unlock-க்கான நேரடி Unlocked நடைமுறை பயிற்சி.
மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்/ தொழில்முனைவோர்கள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் / ஐடிஐ / பாலிடெக்னிக் மாணவர்கள் / வேலை தேடுபவர்கள் /சுயதொழில் ஆர்வலர்கள் தற்போதுள்ள மொபைல் தொழில்நுட்ப வல்லுநர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 8668100181 / 9360221280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032.
பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.