சென்னையில் மின்சார ரெயில் மீது கல்வீச்சு; 3 பயணிகள் காயம்


சென்னையில் மின்சார ரெயில் மீது கல்வீச்சு; 3 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 5 Jan 2026 10:47 AM IST (Updated: 5 Jan 2026 10:47 AM IST)
t-max-icont-min-icon

சமீப காலமாக, ரெயில்கள் மீது கற்களை வீசும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

சென்னை,

திருவள்ளூரில் இருந்து சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. வியாசர்பாடி அருகே ரெயில் வரும்போது, தண்டவாளம் அருகே நின்ற சில மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை தூக்கி வீசினார்கள். இந்த சம்பவத்தில் 3 பயணிகள் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக அடுத்த ரெயில் நிலையத்தில் இறக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். சம்பவம் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ரெயில்வே போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, கல்வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சமீப காலமாக, ரெயில்கள் மீது கற்களை வீசும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கல்லெறி சம்பவங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.

1 More update

Next Story