எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் அப்பகுதியை சேர்ந்த விசுவலிங்கம் (வயது 50) தனது விசைப்படகில் சக்திவேல் (38), கலைமாறன் (29) ஆகியோருடன் மீன்பிடிக்க சென்றார்.

இவர்கள் இரவு 23 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும், விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

மீனவர்களை மீட்க கோரிக்கை

கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரையும், இலங்கையிலுள்ள காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 3 மீனவர் களையும், அவர்களது விசைப்படகையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com