திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்; 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

நேற்று விடுமுறை தினம் என்பதால் நேற்று முன்தினம் இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர்.
திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்; 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
Published on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றன. நேற்று விடுமுறை தினம் என்பதால் நேற்று முன்தினம் இரவு முதலே நூற்றுக்கணக்கான சுற்றுலா பஸ்கள், வேன், கார்கள் போன்றவற்றில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.

அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், ரெயில்களிலும் அதிகளவில் பக் தர்கள் வந்திருந்ததால் கோவில், கடற்கரை பகுதியில் கூட்டம் அைேலமாதியது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே இருந்தது. நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com