தமிழகம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம்..!!

தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம்..!!
Published on

சென்னை,

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கோடை வெயிலின் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சிகளின் 2021-22 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, ஒன்றிய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com