விவசாயிகள் மீது குண்டர் சட்டம் - பாஜக போராட்டம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் - பாஜக போராட்டம் அறிவிப்பு
Published on

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வட ஆளப்பிறந்தான் மற்றும் அத்தி ஆகிய 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண் விளை நிலங்களை தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் புதிதாக தொழில் வளாகம் அமைப்பதற்காக கையகப்படுத்த முடிவு செய்தது. இதனை எதிர்த்து கடந்த 150 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடிவந்தனர். இதில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இதனை எதிர்த்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை போராட்டம் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த திமுக அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, நாளைய தினம் பாஜக சார்பாக, தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம், என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com