வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திசையன்விளையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

திசையன்விளை அந்தோணியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்த வேத ஆசீர்வாதம் என்பவரின் மகன் தனசிங் (வயது 34). இவர் ஒரு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளைங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து அடிதடி, கொலை முயற்சி மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

கலெக்டர் கார்த்திகேயன் இதனை ஏற்று தனசிங்கை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை வள்ளியூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com