வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 29). இவர் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதற்கான ஆணையை டவுன் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com