வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள விட்டிலாபுரம் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி. இவருடைய மகன் பேச்சிமுத்து (வயது 23). இவர் சுத்தமல்லி போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று பேச்சிமுத்துவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com