வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

முன்னீர்பள்ளம்:

நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே உள்ள கொத்தன்குளத்தை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி மகன் ஆனந்தராஜ் (வயது 28). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இவரை முன்னீர்பள்ளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று ஆனந்தராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ஆனந்தராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை, முன்னீர்பள்ளம் போலீசா நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com