பழ வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழ வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பழ வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே நின்று கொண்டு இருந்த பழவியாபாரியிடம் கடந்த மாதம் 11-ந் தேதி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, பாபு என்கிற குளத்துக்கரை பாபுவை (வயது 30) கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் குளத்துக்கரை பாபு மீது 14 திருட்டு வழக்குகளும், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 5 வழக்குகளும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. எனவே, அவரது குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு குளத்துக்கரை பாபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com