பேரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் மழை: மின்தடையால் 10 கிராமங்கள் இருளில் மூழ்கியது

பேரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டு 10 கிராமங்கள் இருளில் மூழ்கியது.
பேரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் மழை: மின்தடையால் 10 கிராமங்கள் இருளில் மூழ்கியது
Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மாலையில் மேகமூட்டங்கள் சூழ்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்று, இடியடன் கூடிய நல்ல மழை பெய்தது.

இதைத்தொடர்ந்து மரங்கள் சாய்ந்து மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி சரிந்தது. இதன் காரணமாக பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்தடை செய்யப்பட்டதால் இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்களும் கடும் அவதியுற்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலையும் பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், களாம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, சத்தரை, மப்பேடு போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10 கிராமங்களில் மின்தடை செய்யப்பட்டதால் இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர்.

அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக பொதுமக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகிறார்கள். எனவே இனி வரும் காலங்களில் சீரான மின்சார விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com