

சென்னை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் கன்னியாகுமரி, கன்னியாகுமரி-எழும்பூர், தாம்பரம்-தென்காசி இடையே சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு;
* சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 5-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் ஒரு வழி சிறப்பு ரெயில் (வண்டி எண்.06151), தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், திரிப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை. கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக மறுநாள் மாலை 3.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
* கன்னியாகுமரியில் இருந்து வருகிற 9-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்படும் ஒரு வழி சிறப்பு ரெயில் (06152), நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, கோவில்பட்டி, சாத் தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரிய லூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மறுநாள் மதியம் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
* தாம்பரத்தில் இருந்து வருகிற 7-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06049). செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத் தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர் வழியாக அதேநாள் மாலை 4.45 மணிக்கு தென்காசி சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டை யில் இருந்து வருகிற 9-ந்தேதி மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06050), மேற் கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.