தாளவாடி அருகே புலி தாக்கி பசு மாடு பலி

தாளவாடி அருகே புலி தாக்கி பசு மாடு இறந்தது.
தாளவாடி அருகே புலி தாக்கி பசு மாடு பலி
Published on

தாளவாடி

தாளவாடி அருகே புலி தாக்கி பசு மாடு இறந்தது.

10 வனச்சரகங்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஜீர்கள்ளி, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து புலி, சிறுத்தை போன்றவை வெளியேறி வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்கள் மற்றும் தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவம் தாளவாடி அருகே நடைபெற்று உள்ளது.

மாட்டை கொன்ற புலி

தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ். 5 மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் மாடுகளை வழக்கம்போல் அந்த பகுதியில் உள்ள மானாவாரி இடத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அதன்படி நேற்று மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாலையில் மாட்டை பிடிக்க சென்றபோது ஒரு பசு மாட்டை மட்டும் காணவில்லை. இதனால் அவர் அந்த மாட்டை தேடி பார்த்தார். அப்போது சிறிது தூரத்தில் அந்த பசு மாடு கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தாளவாடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பசு மாட்டை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் பதிவான கால் தடங்களையும் ஆய்வு செய்தனர். அப்பேது அது புலியின் கால் தடம் என தெரியவந்தது. எனவே வனப்பகுதியில் இருந்து புலி வெளியேறி மானாவாரி நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை கடித்து கொன்றுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது தெரியவந்தது.

மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை புலி அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com