குடியிருப்பு பகுதியில் உலா வரும் புலி... மக்கள் அச்சம்

வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
tiger roaming
Published on: 

கன்னியாகுமரி,

குடியிருப்பு பகுதியில் புலி உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருகே சிற்றூர் அணை பகுதி இருந்து வருகிறது. இங்குள்ள குடியிருப்பு பகுதி அருகே சில தினங்களாக புலி நடமாட்டம் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது வரை புலியை பிடிக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் புலி ஒன்று உலா வரும் நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். புலி நடமாட்டம் உள்ளதால் தினமும் உயிருக்கு பயந்து அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். புலியை விரைந்து பிடிப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ரோந்து பணியை வனத்துறையினர் தீவிரப் படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் புலி உலா வருவதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com